சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம்
உளுந்துார்பேட்டை அடுத்த உ.செல்லுாரில் அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.;
உளுந்துார்பேட்டை அடுத்த உ.செல்லுாரில் அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை அடுத்த உ.செல்லுாரில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 25 குழந்தைகள் படிக்கின்றனர். மைய பொறுப்பாளராக பூங்கொடி உள்ளார். நேற்று மதியம் 12:00 மணியளவில் மதிய உணவு சமைத்து மாணவர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்பட்டது.உணவு சாப்பிட்ட மாணவர்களில் உ.செல்லுார் ரமேஷ் மகள் தர்ஷிகா, 2; வெங்கடேசன் மகன் தெய்வீகன், 3; முருகன் மகன் யாஷிதா, 2; மோகன் மகன் வெண்முகில், 5; உட்பட 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடன் குழந்தைகள் அனைவரும் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வட்டார குழந்தைகள் நல அலுவலர் ஜெயந்தி, டி.எஸ்.பி., மகேஷ், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில் உணவில் பாசி பூச்சி கிடந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உளுந்துார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.