ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் புகை போக்கி திறப்பு விழா

ஆரல்வாய்மொழி பேரூராட்சியை குப்பை இல்லா பேரூராட்சியாக உருவாக்கும் நோக்கில் தோட்ட பகுதியில் புகை போக்கி அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது

Update: 2024-02-17 09:47 GMT
ஆரல்வாய்மொழியில் கழிவு புகைக்கூண்டு திறப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சியை குப்பை இல்லா பேரூராட்சியாக உருவாக்கும் நோக்கில் தோட்ட பகுதியில் புகை போக்கி அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்து புகை போக்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். துணைத் தலைவர் சுதா பாலகிருஷ்ணன், உறுப்பினர்கள்  மற்றும் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர். திறக்கப்பட்ட புகை கூண்டு  மூலம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு, உபயோகமற்ற மட்காத குப்பைகள் மற்றும் மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத உபயோகமற்ற பாய், தலையணை, மெத்தை போன்ற இதர பொருட்களை பொது இடங்களில் வீசாமல் தூய்மை பணியாளரிடம் கொடுத்தோ அல்லது பஞ்சாயத்து தோட்டத்தில் திறக்கப்பட்டுள்ள புகை போக்கியில் காலை 6:00 மணி முதல் மாலை 5 மணி வரை கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இதனால் ஆரல்வாய் பேரூராட்சி குப்பை இல்லா தூய்மையான பேரூராட்சியாக திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும். எனவே பொதுமக்கள் அனைவரும் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்  என தலைவர் முத்துக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
Tags:    

Similar News