சிவகாசியில் சித்திரை திருவிழா

சிவகாசியில் சித்திரை திருவிழா தேரோட்ட விழாவில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2024-05-11 14:38 GMT
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.சிவகாசி பத்ரகாளியம்மன் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 11 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் அம்மன் சிங்க வாகனம், காமதேனு வாகனம்,கைலாச பர்வத வாகனம்,குதிரை வாகனம் உட்பட பல்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.கடந்த செவ்வாய்கிழமை பொங்கல் திருவிழா நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற கயறுகுத்து திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கயர் குத்து,முடிக்காணிக்கை, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை ஆகிய நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுவான தேரோட்டம் நிகழ்ச்சியில் சிறிய தேரில் விநாயகர் ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தார். தொடர்ந்து பெரிய தேரோட்டம் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வீற்றிருந்த அம்மனை வணங்கி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழா ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News