கிறிஸ்துமஸ் : கோவையில் 50 அடி உயர ஈபிள் டவர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள வர்த்தக வளாகத்தில் 50 அடி உயரத்தில் ஈபிள் டவர் மாதிரி நிறுவப்பட்டுள்ளது.

Update: 2023-12-22 05:07 GMT

ஈபிள் டவர் மாதிரி 

கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு இடம்க்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக சக்தி சாலை சரவணம்பட்டி புரோஜோன் மால் வர்த்தக வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் பொருத்தபட்டு கிறிஸ்துமஸ் மரங்களும் அலங்கார தோரணங்களுடன் அமைக்மப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சுமார் 50 அடி உயரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான புகழ் பெற்ற ஈபிள் டவர் மாதிரி நிறுவப்பட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கோபுரம் அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. வருகிற 31ஆம் தேதி வரை இந்த டவர் காட்சிப்படுத்தப்பட உள்ளதுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வளாகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் 10 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளதாகவும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளதாகவும் புரோஜோன் மாலின் இயக்குனர் விஜய் பாடியா மற்றும் விற்பனை பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Tags:    

Similar News