செல்லம்பட்டி தனியார் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம்
உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பாத்திமா கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.
Update: 2023-12-22 11:35 GMT
உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பாத்திமா கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியான பாத்தியா கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடினர்.இதனைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பள்ளி குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அறுப்பணி சாமிநாதன், அருட்சகோதரி நிர்மலா தாமஸ், பள்ளி தாளாளர் அருட்சகோதரி ஜோதி, பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.