கிறிஸ்துமஸ் விழா: நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

சேலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது

Update: 2023-12-25 01:35 GMT

கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை 

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாநகரில் நள்ளிரவு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சேலம் அரிசிபாளையம் குழந்தை ஏசு பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. அப்போது ஏசு பிறப்பை குறிக்கும் வகையில் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன், குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் எடுத்து கிறிஸ்தவர்கள் மத்தியில் உயர்த்தி காண்பித்தார். பின்னர் அவர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட குடிலில் சொரூபத்தை வைத்து சிறப்பு பிரார்த்தனையை தொடங்கி வைத்தார்

. அப்போது, குழந்தை ஏசு பேராலயத்தின் பங்கு தந்தை ஜோசப் லாசர், உதவி பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து குழந்தை ஏசு சொரூபத்தை அனைவரும் தொட்டு வணங்கினர். தொடர்ந்து பேராலயத்திற்குள் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும், சிறுவர், சிறுமிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்திருந்ததை காணமுடிந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

Tags:    

Similar News