சேலம் சரவணா பேக்கரியில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு

சேலம் சரவணா பேக்கரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-22 03:41 GMT

கிறிஸ்துமஸ் குடில் திறப்பு 

சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் சரவணா பேக்கரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா நடந்தது. பிரபல வடிவமைப்பு கலை இயக்குனர் தோட்டா பானுஜி தலைமையில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலை அருட்சகோதரிகள் ஏஞ்சலா, பெமிலா, குழந்தை ஆகியோர் திறந்து வைத்து பிரார்த்தனை செய்தனர்.

விழாவில் ஓட்டல் சங்க தலைவர் சிவசக்தி சண்முகம், செயலாளர் செல்வி மெஸ் பழனிச்சாமி, ஆலோசகர் சந்திரா கேப் நாராயணன், கவுரி சங்கர் அபுதாகிர், ஆத்தூர் டாக்டர் விஜயகுமார், வர்மம் செந்தில், குருசீனிவாசன், அக்ரி அன்பழகன், ஏற்காடு தொழில் அதிபர் ரவி, தி.மு.க. பிரமுகர் அறிவு, வேலூர் கிரி கேட்டரிங் அருணகிரி, ஆடிட்டர் ரவி சுப்பிரமணியம், சரவணபவன் தேர்வீதி ரகுபதி, பெங்களூரு வெங்கடேஷ், இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் பேக்கரி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சரவணா பேக்கரி உரிமையாளர்கள் வி.சி.எஸ்.சிவராமன், கார்த்திகா சிவராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.

சரவணா பேக்கரி நிர்வாகிகள் கூறுகையில், சேலம் சரவணா பேக்கரி 25 ஆண்டுகளாக சேலம் மக்களின் நம்பிக்கையை பெற்று இயங்கி வருகிறது. இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட குடில் காண்போரை கவரும் வகையில் உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி தயாரிக்கப்பட்ட பல வகையான கேக்குகள், சலுகை விலையில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 1-ந் தேதி வரை ஒரு கிலோ கேக் வாங்கினால் 200 கிராம் பெரிய மிக்சர் வழங்குகிறோம். வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சரவணாஸ் இத்தாலியன் சாப்டி ஐஸ்கிரீமில் வாங்கும் ஒவ்வொரு ஐஸ்கிரீமுக்கும் ஒரு ஐஸ்கிரீம் இலவசமாக தருகிறோம். அதுவும் குறிப்பிட்ட வகைகளுக்கு மட்டும்தான். பார்சல் வாங்கினால் இச்சலுகை பொருந்தாது என்றனர்.

Tags:    

Similar News