காங்கிரஸ் வேட்பாளருக்கு தென்னிந்திய திருச்சபை ஆதரவு

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை சந்தித்து தென்னிந்திய திருச்சபை சினாடு மாமன்ற நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.

Update: 2024-03-29 05:03 GMT

ஆதரவு தெரிவித்த தென்னிந்திய திருச்சபையினர்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவரை இன்று (மார்ச் 29) தென்னிந்திய திருச்சபை சினாடு மாமன்ற பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்தின ராஜா தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தென்னிந்திய திருச்சபைகளை சார்ந்த 3.5 லட்சம்  வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News