டாஸ்மாக் கடை திறக்கும் முன்னே மட்டையாகி மண்டை உடைந்த குடிமகன்
மயிலாடுதுறையில் டாஸ்மாக கடை திற்க்கு முன்னரே போதையில் 'குடிமகன்' கீழே விழிந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.
Update: 2023-12-25 13:45 GMT
அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடை மதியம் 12 மணிக்குத் திறந்து இரவு 10 மணிக்கு மூடுவது வாடிக்கை, ஆனால் பல ஊர்களில் எந்த நேரத்திலும் கருப்புச்சந்தையில் சரக்குகள் கிடைப்பதும் வழக்கம். மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் காலை 11 மணிக்கு முழு போதையில் தள்ளாடிய நபர் ஒருவர், பேருந்து நிலைய கட்டிடத்தின் தூண் கட்டையில் அமர்ந்திருந்தார், போதை தலைக்கேறி திரும்பும் பொழுது தலை குப்புற சிமெண்ட் தரையில் விழுந்ததார். இதனால் அவரது நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிந்து முகம், உடல், உடையில் நனைந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று காவல்துறையிடம் முறையிட, தனிப்பிரிவு போலீசார் குமார் சம்பவ இடம் சென்று 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, நினைவு தவறிய குடி போதை ஆசாமியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.