திருச்செங்கோட்டில் பேட்டரி வாகனங்களை நகரமன்ற தலைவர் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சியில் 15வது நிதிக்குழு மானிய நிதியில் திடக்கழிவு மேம்பாட்டு திட்டத்தில் வழங்கப் பட்ட பேட்டரி வாகனங்களை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-11 11:09 GMT

வாகனங்களை ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர் 

திருச்செங்கோடு நகராட்சியில் 2023ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானிய நிதியில் திடக்கழிவு மேம்பாட்டு திட்டத்தில் வழங்கப் பட்ட வீடுவீடாக சென்று மக்கும் மக்கா குப்பைகள் வாங்க 27 பேட்டரி வாகனங்கள் மற்றும் ஏற்கனவே இருந்த சிறு சிறு பழுதுகள் நீக்கப்பட்ட 27 வாகனங்கள் என மொத்தம் 54 வாகனங்கள் முழுவதும் பெண்களை கொண்டு தினசரி வார்டு பகுதிகளுக்கு சென்று குப்பைகளை வாங்கும் பணியை செய்து வருகின்றனர்.

இந்தப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்து திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆய்வு. நகரின் 33 வார்டுகளிலும் எந்த பகுதியிலும் குப்பைகள் தேங்காத படி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்தினசரி இதே போல் ஆய்வுகள் மேற்கொள்ளப் படும் என தூய்மை பணியாளர்களுககு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு அறிவுறுத்தினார்.

திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் நடந்த ஆய்வின் போது திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், திவ்யா வெங்கடேஷ்,அகர திமுக துணைச் செயலாளர் மைக்கா ரமேஷ்,மற்றும் பகுதி திமுக பிரமுகர்கள் செங்கோட்டுவேல்,மூர்த்தி, ரகு, டிபிசி பணியாளர்கள் மாரியம்மாள், சுமதி,ஆனந்தி, மஞ்சு,சௌந்தர்யாஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News