ஆலோசனை கூட்டம்- நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
முதல்வரின் திட்ட மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் குறித்து ஆலோசனை
Update: 2023-12-16 08:51 GMT
அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் டிசம்பர் 18, 19, 20,21 ஆகிய தேதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. நகராட்சி தலைவி சாந்தி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் இந்த சிறப்பு முகாமை நடத்துவது குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும் தங்கள் வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த சிறப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தபட்டது. இதில் அரியலூர் நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.