சிவகங்கையில் சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவர்
சிவகங்கையில் சொட்டு மருந்து முகாமை நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-03 10:11 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பேருந்து நிலையம் அருகில் ஐந்து வயது குழந்தைகளுக்கு உட்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை இன்று நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் குழந்தைகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
உடன் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ராமதாஸ், மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்