திருப்பத்தூர் : நகரமன்ற கூட்டத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி சிதிலமடைந்த கட்டிடத்தை புதுப்பிக்க நகர மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்!

Update: 2023-12-02 07:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரமன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் பி. ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தார். நகரமன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.ஆறுமுகம், நகராட்சி ஆணையாளர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். சாதாரண மன்ற கூட்டத்தில் வரவு செலவு மற்றும் திட்ட பணிகளுக்கான 46 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தொ

டர்ந்து மன்ற உறுப்பினர்கள் வார்டு பகுதியில் நிலவும் பிரச்சனை மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது 13வது வார்டு உறுப்பினர் ரமேஷ் பேசுவையில்:- ஆம்பூர் நகரத்திற்குள் மாடுகள் மற்றும் நாய்கள் அதிகளவில் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. அப்புறப்படுத்த வேண்டும். ஏற்கனவே அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவுயிட்டு இருந்தோம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக இதே நிலைதான் உள்ளது. கஸ்பா பீ பகுதியில் இரண்டு கழிவறைகளை கட்டி முடித்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

5வது வார்டு உறுப்பினர் வசந்த் பேசுவையில்:- நகராட்சி பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டிடத்தை விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 வது வார்டு உறுப்பினர் இம்தியாஸ் பேசுகையில்:- வார்டு பகுதியில் உள்ள பால்வாடி பள்ளி கட்டிடம் பழுதாகி உள்ளது. 50 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன்பு பாழடைந்த கட்டிடம் அப்புற படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் கட்டணம் மற்றும் வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் அங்கே சாலை அமைக்க ஏன் தயக்கம் என கேள்வி எழுப்பினார்.

21 வார்டு உறுப்பினர் நபீஸ் ரஹ்மான் பேசுகையில்:- வார்டு பகுதியில் உள்ள 30 சாலைகள் சேரும் சக்தியாக உள்ளது. சாலை அமைத்து தர வேண்டும். 150 மின் கம்பங்கள் உள்ளது. அதில் விளக்குகள் இல்லை. விளக்குகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 வார்டு உறுப்பினர் நூல்லா பேசுகையில்:- முஹம்மத் பூரா 2 வது தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தனியார் பெயரில் பட்டா வாங்கியுள்ளார். அதனை ரத்து செய்ய வேண்டும். மன்ற உறுப்பினர்களின் கோரிக்கை கேட்ட பின்னர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தார். கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் நகராட்சி மேலாளர் விஜியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News