கோவில்பட்டியில் வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட பூப்பால்லாக்கில் நகர் வலம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம்-கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம்-கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வைகாசி திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது.
இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி முக்கிய ல் வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் 20-ஆம் தேதியும்,
திருத்தேரோட்டம் 21-ஆம் தேதியும் நடந்தது நேற்றிரவு பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட பூப்பால்லாக்கில் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.