வேடசந்தூர் அருகே ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
வேடசந்தூர் அருகே ஜேசிபி வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-04 10:38 GMT
சிறைப்பிடிக்கப்பட்ட ஜேசிபி இயந்திரம்
வடமதுரை ஒன்றியம் வேல்வார் கோட்டை ஊராட்சி வெள்ள பொம்மன் பட்டியில் பட்டாங்குளம் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு செல்லும் நீர் ஓடையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ய சென்றார்.அப்போது இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் JCB இயந்திரத்தை சிறைபிடித்தனர்
.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக பொது வாய்க்கால்களை ஆக்கிரமித்து சேதப்படுத்துகின்றனர்.இதனால் கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.