பொங்கலுக்கு மண்பானை, அடுப்பு -அரசிற்கு மண்பாண்ட தொழிலார்கள் கோரிக்கை
பொங்கல் திருநாளிற்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் புது மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்க வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் போது விவசாயிகளின் வாழ்வு மேம்பட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு , பச்சரிசி , வெள்ளம் ,உள்ளிட்டவை வழங்குகிறது. அதேபோல் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வேஷ்டி, சேலை ஆகியவற்றை வழங்குகிறது. அதேபோல் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பொங்கல் திருநாளிற்கு ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் புது மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் சமுதாய மக்களின் வாழ்வு மேம்பட சாதி வாரி கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டையும் ,சமூக நீதி கிடைத்திடவும் வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண் பானைகள் மற்றும் மண் அடுப்புகளுடன் வந்து மனு அளித்தனர்.