கிளினிக் பூட்டை உடைத்து கொள்ளை - வாலிபர் கைது
சேலம் தாதகாப்பட்டியில் தோல் மருத்துவ கிளினிக்கின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
கைது
சேலம் சூரமங்கலம் சுப்பிரமணியநகரை சேர்ந்தவர் நிவாஸ் மனைவி டாக்டர் பவி (34). இவர், சேலம் தாதகாப்பட்டி வேலு நகரில் தோல் மருத்துவ கிளினிக் வைத்துள்ளார். நேற்று முன்.தினம் இரவு கிளினிக்கை பூட்டி விட்டு பவி வீட்டிற்கு திரும்பினார். நேற்று காலை,கிளினிக்கில் வேலை பார்க்கும் ஊழியர் திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது' பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்துள்ளது. உடனே டாக்டர் பவி வந்து பார்த்துவிட்டு, அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கிளினிக்கிற்குள் புகுந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. அதுபற்றி வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரித்தனர். அதில், சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரதாப் (33) என்பவர் உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, ரூ.1000ஐ மீட்டனர். பின்னர் கைதான பிரதாப்பை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.