மருத்துவ மர பூங்கா மூடல் - அரியவகை செடிகள் அழியும் அபாயம்
பழனியில் மருத்துவ மர பூங்காவானது திடீரென காரணமின்றி மூடப்பட்டதால் பூங்காவில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை மரங்கள் மற்றும் செடிகள் பராமரிப்பு இன்றி அழியும் நிலை உருவாகியுள்ளது.;
Update: 2024-02-25 11:26 GMT
மருத்துவ மர பூங்கா
பழனியில் வனத்துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மருத்துவ மரப் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரவேற்பு பெற்ற மருத்துவ மர பூங்காவானது திடீரென காரணமின்றி மூடப்பட்டதால் பூங்காவில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை மரங்கள் மற்றும் செடிகள் பராமரிப்பு இன்றி அழியும் நிலை உருவாகியுள்ளது. எனவே பூங்காவை மீண்டும் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.