சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் : ஹோட்டலுக்கு அபராதம்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டலில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-25 02:10 GMT

திருப்பூர் ரயில் நிலையம் அருகே பிரபல சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது.  கடந்த 20ஆம் தேதி திருப்பூரில் எல்ஐசி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதற்காக மதிய உணவு ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல சைவ ஹோட்டலில் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. கூட்டம் முடிந்து எல்ஐசி முகவர்கள் மதியம் உணவு அருந்த சென்றபோது பெண் எல்ஐசி முகவர் ஒருவர் உணவு உட்கொள்ளும் போது அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி  இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எல்ஐசி முகவர்கள் ஹோட்டல் உரிமையாளர்களிடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். புகாரின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உணவகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின் உணவகம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.  உணவு பாதுகாப்பு உரிமம் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் படி காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.  சமைத்த உணவுகளை பரிமாறும் அனைவரும் முகக் கவசம் , தலைக்கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். தயாரிப்புக்கூடம் சுத்தமாகவும் சுகாதாரமும் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.  ஊர்வன பூச்சிகள் கட்டுப்பாட்டு முறையை பராமரிக்கவும் அதன் அதற்கான சான்றுகள் பதிவேடுகள் பராமரிக்கவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.  உணவு கையாள்பவர்களின் அவசியம் மருத்துவச் சான்று பராமரிக்கப்பட வேண்டும். அஜாக்கிரதையாக செயல்பட்டதற்காக உணவகத்திற்கு 1000 ரூபாய் அபராதம் விதித்ததோடு உணவு பாதுகாப்புத்துறை பிரிவு 55 இன் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News