கோவைக்கு தேவையானதை போராடி பெற்று வருவேன்-சிங்கை ராமசந்திரன்
கோவையில் சுட்டெரிக்கும் வெயிலிலும் அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வரும் அவர் மருதமலை பகுதியில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமாருடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிங்கை ராமச்சந்திரன் பேசுகையில் நான் வெளியூர்காரன் இல்லை எனவும் உங்கள் ஊரை சேர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன் நீங்கள் போன் செய்தால் எடுப்பேன் என்றும் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே திருப்பி அழைப்பேன் என்றார்.
மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவையானதை போராடி பெற்று வருவேன் என்றவர் ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு தொழில் உண்டு அதேபோல் சின்னதடாகம் பகுதியில் செங்கல் சூளை தான் முக்கிய தொழிலாக இருந்தது அதனை அழிய விடக்கூடாது எனவும் அது தான் அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்தது எனவே மீண்டும் அதனை கொண்டுவர முயற்சி எடுப்பேன் என்றார்.
எப்போதும் உங்களுடன் கைகோர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளராகிய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.இதனை தொடர்ந்து நால்வர் நகர்,நவாவூர், சோமையம்பாளையம், ஆசிரியர் காலனி, கணுவாய்,குப்பநாயக்கன்பாளையம், கணுவாய்,திருவள்ளுவர் நகர்,சோமையனூர், ஊஜ்ஜையனூர், சின்னதடாகம்,மடத்தூர், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம்,தாளியூர் சஞ்சீவி நகர்,பன்னிமடை என மொத்தம் 37 இடங்களில் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.