குடுகுடுப்பைகாரன் வேடமிட்டு வித்யாசமான முறையில் வாக்கு சேகரிப்பு

காரைக்குடி அருகே குடுகுடுப்பைகாரன் வேடமிட்டு வித்யாசமான முறையில் திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.;

Update: 2024-03-18 11:24 GMT

வாக்கு சேகரித்த குடுகுடுப்பை காரர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய பேருந்து நிலையம், மருது பாண்டியர் நகர், 100 அடி ரோடு ஆகிய பகுதிகளில் திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் கையில் உடுக்கையோடு, செவ்வாடை அணிந்து ஜக்கம்மா சொல்றா திமுக தலைவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கல்லூரி பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகின்றார்.

Advertisement

மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் சொல்கிறவர்தான் இந்த தொகுதியின் அடுத்த எம்பியாக வர முடியும் என ஜக்கம்மா சொல்றா எனவும், கேஸ் விலை உயர்வு பெட்ரோல் டீசல் உயர்வு என பல்வேறு விலைவாசி உயர்வுகளுக்கு காரணமாக இருக்கும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

அதை தடுக்கும் சக்திதான் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் எனவே மக்கள் திமுக ஆட்சியை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வீதி வீதியாக சென்று வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tags:    

Similar News