எடப்பாடி சட்டமன்றம் தொகுதியில் திமுக சார்பில் வாக்கு சேகரிப்பு !
சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி எம் செல்வகணபதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 09:51 GMT
டி.எம்.செல்வகணபதி
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதி, மேச்சேரி ஒன்றியம், குட்டப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விருத்தாசம்பட்டி,குட்டப்பட்டி, மாத நாயக்கன்பட்டி, மலையடிப்பட்டி ஆகிய பகுதிகளில் இந்தியா கூட்டணி சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர்,சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.எம்.செல்வகணபதி திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்வில் எடப்பாடி தொகுதி பொறுப்பாளர் பரணி கே.மணி,மேச்சேரி ஒன்றிய கழக செயலாளர் சீனிவாச பெருமாள்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடப்பாடி தொகுதி பொறுப்பாளர் ஜீவானந்தம், இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.