கொடி நாள் நிதியாக ரூ.1.32 கோடி வசூல்
தர்மபுரி மாவட்டத்தில் கொடி நாள் நிதியாக ரூ.1.32 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், 07/12/2023 தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கொடி நாள் நிதியாக ரூ.1.32 கோடி வசூல்.
படைவீரர் கொடி நாளையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கொடிநாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நம் தாய்நாட்டை காக்கும் வகையில் பணி, வெயில், மழை எதுவும் பாராமல் நமது தேசத்திற்காக பாதுகாக்கும் படைவீரர்கள் மற்றும் போர் வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த படைவீரர் கொடி நாளில் தேசத்திற்காக பாதுகாக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்காக தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு அதிகாரிகளால் திரட்டப்படும் கொடிநாள் நிதியானது, தன் உயிரை பணயம் வைத்து பனி, வெயில், மழை இவை எதுவும் பாராமல் நம் எல்லையில் பாடுபடும் போர்வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கு பல்வேறு நிதியுதவிகளை வழங்குவதற்காக திரட்டப்படுகிறது. அரசின் சார்பில் முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் இலக்கான ரூ.1.21 கோடி (ரூ.1,21,30,000)-ஐ விட அதிகமாக ரூ.1.32 கோடி (5.1,32,36,852) வசூல் செய்யப்பட்டு கொடிநாள்-2022 நிதி திரட்டப்பட்டுள்ளது. முன்னதாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் 2024- ஆம் ஆண்டிற்கான கொடிநாள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொடிநாள் நிதி அளித்து வசூலை தொடங்கி வைத்தார்.
எதிர்வரும் ஆண்டுகளிலும் இலக்கினை விட கூடுதலாக கொடிநாள் நிதி வசூல் செய்து வழங்கிட அரசுத்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதனை தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் 22 முன்னாள் படை வீரரது சிறார்களுக்கு ரூ.5.02 இலட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். முன்னதாக, 1971- இந்தியா, பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த இந்திய படைவீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், பங்குபெற்ற வீரர்களின் நினைவாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, முன்னாள் படைவீரர்களுக்கு கேடயங்களை வழங்கினார். மாவட்ட நிர்வாகம் என்னென்றும் முன்னாள் படைவீரர் நலனில் உறுதுணையாக இருக்கும். மேலும், முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி முழுமையாக பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வின் போது கூடுதல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் இராமதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் (பொறுப்பு) ச.பிரேமா, கர்னல் செங்கோட்டையன், ஜூனியர் வாரன்ட் ஆபிஸர் கே. கிருஷ்ணமூர்த்தி (ITVVO-பொது செயலாளர்), ஹானரி லெட்டினன்ட் ஜி. நடராஜன் NSG Cdo (ESSAAA-மாவட்ட தலைவர்), காப்பல் கே.ஜி. முருகன் (ITVVO-மண்டல தலைவர்), ஹவில்தார் பி.முனுசாமி (ESSAAA-STATE TREAS), நாய்க் கே.மாதன் (ESSAAA-மாவட்ட தலைவர்) மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.