கொடிநாள் நிதியாக ரூ.1.40 கோடி வசூல்
கொடிநாள் நிதியாக ரூ.1.40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-08 10:48 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டில் கொடிநாள் நிதியாக ரூ.1.40 கோடி வசூலிக்கப்பட்டதாக மாவட்ட வருவாய் அலுவலா் சேக் முகையதீன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் படை வீரா் கொடிநாள்- 2023-க்கான நிதி வசூலிக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் ஹா.சேக் முகையதீன் நிதி வழங்கி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.இதையடுத்து, கொடிநாள்- 2021-ஆம் ஆண்டில் அதிக நிதி வசூலித்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (வளா்ச்சி) மு. ராணிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.