ரத்ததானம் செய்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்ததானம் செய்தவர்களை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பாராட்டினார்.;
Update: 2024-06-29 07:43 GMT
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்ததானம் செய்தவர்களை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பாராட்டினார்.
உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (ஜூன் 29) ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார். இதில் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.