நீர்வரத்து தூர்வாரும் பணிகள்:ஆட்சியர் ஆய்வு

சாத்தான்குளம் அருகே திருப்பணிபுத்தன் தருவை நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகள் தொடர்பாக ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தார்.

Update: 2024-06-27 10:36 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் திருப்பணிபுத்தன் தருவை ஊராட்சிக்குட்பட்ட செட்டிவிளை பகுதியில் சடையனேரி கால்வாயிலிருந்து நீர்வரத்து பெறும் திருப்பணிபுத்தன் தருவை நீர்ப்பிடிப்புப் பகுதியினை முறைப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு, விவசாயிகளின் விளைநிலங்களுக்குத் தேவையான பாசன நீர் கிடைக்கக்கூடிய வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  (26.06.2024) சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, மருதூர் மேலக்கால் கால்வாயிலிருந்து சடையனேரி வழியாக திருப்பணிபுத்தன் தருவை நீர்ப்பிடிப்புப் பகுதிக்கு செல்லக்கூடிய வரத்துக் கால்வாயில் நீர்வளத்துறையின் மூலமாக ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புனரமைப்புப் பணிகளில் (தடுப்புச் சுவர், சிறு மேம்பாலம் அமைத்தல், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல்) ஒரு பகுதியாக சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் முதலூரில் நடைபெற்றுவரும் தடுப்புச் சுவர் மற்றும் சிறு மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, புனரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

பின்னர், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சி, சொக்கலிங்கபுரம் கிராமம் அப்துல்கலாம் நகரில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, குடியிருப்புகள் கட்டப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் முற்றிலும் வீடு சேதமடைந்தவர்கள் கண்டறியப்பட்டு, புதிதாக வீடு கட்டுவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.4 இலட்சத்திற்கான வேலை உத்தரவு ஆணை வழங்கியதைத்தொடர்ந்து, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட குலசேகரன் குடியிருப்புப் பகுதியில் ஜெயக்கொடி மற்றும் முல்லை வாணி ஆகியோரின் வீடு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News