வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு.....

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர கற்பகம் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-06 06:19 GMT

ஆய்வு

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர கற்பகம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திரகுமார் வர்மா, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திரகுமார் வர்மா, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட .பெரம்பலூர், துறையூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு, வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள், தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு வரும் கம்பி வேலிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரும் வாகனங்கள் முறையாக உள்ளே வந்து வெளியேறுவதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னேற்பட்டு பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி, வட்டாட்சியரகள் சரவணன், மாய கிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News