தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் பாடுபடனும்: கலெக்டர்

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் பாடுபடனும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-05-18 11:03 GMT
ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு நகராட்சி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான மேலாய்வு கூட்டம் நடந்தது.

கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்து ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக அரசு நகராட்சி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி வாரியாக தேர்ச்சி அறிக்கை பாடவாரியாக சராசரி மதிப்பெண் தேர்ச்சி பெறாத மாணவர்கள் விவரம் தேர்ச்சி பெறாத மாணவர்கள் காலாண்டு,

அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் வருகை சதவீதம் தேர்ச்சி பெறாமைக்கான காரணம் இந்த கல்வியாண்டில் 100% பெறுவதற்கான இலக்கு ஆகியவை குறித்து தலைமை ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் கலெக்டர் கூறுகையில் பள்ளிக்கு சரியாக வருகை புரியாத மாணவர்கள் குறித்து விபரத்தை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளியில் மூன்று நாட்களுக்கு மேல் பள்ளிக்கு மாணவிகள் வராமல்,

இருந்தால் அது பற்றி தகவலை உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க செய்து சிறப்பு பயிற்சி வகுப்பு வாயிலாக துணை தேர்வில் தேர்ச்சி பெற செய்து 11ம் வகுப்பில் சேர்த்து தொடர்ந்து பயில்வதற்கு வழிகாட்டுதல் வேண்டும். பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News