வேதாரண்யத்தில் ஜமாபந்த நிகழ்ச்சியில் மனுக்களை பெற்ற ஆட்சியர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், பொதுமக்கள் மனுக்களை பெற்றார்.

Update: 2024-06-13 16:03 GMT

மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் 

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் வருவாய் தீர்வாயம் கணக்கு முடிக்கும் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், பொதுமக்கள் மனுக்களை பெற்றார்.

  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1433-ம் பசலி ஆண்டிற்கான ரயத்துவாரி, இனாம், மைனர் இனாம் (அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டவை உட்பட) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்டம் முழுவதும் 11.06.2024 தொடங்கி 26.06.2024 வரை நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், 

 வருவாய்த் தீர்வாய அலுவலராக பங்கேற்று வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். தலைஞாயிறு வட்டம் கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, கள்ளிமேடு, தலைஞாயிறு 4-ம் சேத்தி, தலைஞாயிறு 3-ம் சேத்தி, தலைஞாயிறு 5-ம் சேத்தி ஆகிய கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல்,

வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 60 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் மனுக்களை உடனடியாக பரிசீலித்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வட்டாட்சியர் இரா.திலகா அவர்கள், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News