10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை ஆட்சியர் உமா நேரில் ஆய்வு !
மாவட்ட ஆட்சியர் உமா புதுச்சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 06:08 GMT
ஆட்சியர் உமா
நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, இம்மாதம் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 92 தேர்வுமையங்களில் 10,335 மாணவர்களும் 9,697 மாணவிகளும் ஆக மொத்தம் 20,032 பேர் தேர்வு எழுதவுள்ளனர். 8 மையங்களில் தனித்தேர்வர்களாக 417 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களில், 334 மாணவர்களுக்கு சொல்வதை எழுதும் உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 92 முதன்மைக்கண்காணிப்பாளர்கள், 92 துறைஅலுவலர்கள், 4 கூடுதல்துறைஅலுவலர்கள், 140 பறக்கும் படை உறுப்பினர்கள், 24 வழித்தடஅலுவலர்கள், 6 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் 1,295 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை பார்வையிட மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணைஇயக்குநர், மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலகள் மற்றும் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர்களைக் கொண்ட குழுவினர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாவட்ட ஆட்சியர் உமா புதுச்சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.