தலைமை ஆசிரியர்களுடன் கலெக்டர் ஆலோசனை!
பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆலோசனை நடத்தினார் .;
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 17:11 GMT
ஆலோசனை
பொதுத்தேர்வுகளில் கடைசி இடங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கலெக்டர் வளர்மதி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நடந்து முடிந்த 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடைசி 45 இடங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எந்த பாடத்தில் குறைவு மற்றும் அதற்கான காரணம் குறித்து ஆசிரியர்களிடம் கலெக்டர் வளர்மதி கேட்டு கலந்துரையாடினார். அப்போது அவர் கடந்த ஆண்டில் கடைசி இடத்திலிருந்து இந்த ஆண்டு முன்னிலைக்கு வந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் அவர்கள் கடைபிடித்த வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.