அரசுப் பொருட்காட்சி அரங்கு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்!
கோவை அரசுப் பொருட்காட்சி அரங்கு பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
Update: 2024-05-18 13:44 GMT
கோவை:காந்திபுரம் பகுதியில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அரசு பொருட்காட்சி துவங்க அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகள் அடங்கிய அரங்குகள்,குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், வித விதமான உணவு வகைகள்,வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை இடம் பெற உள்ளன."தமிழக அரசின் சார்பாக கோவை மாநகரில் ஒவ்வொரு துறையின் திட்டங்களை விளக்கும் விதமாக பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்ட உள்ளது.கடந்த ஆண்டை விட பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்வையிட்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருட்காட்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்ட உள்ளது. அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட உள்ள அரங்குகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் சென்று பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.