தேர்தல்  விழிப்புணர்வு சுவரோவியத்தை பார்வையிட்ட ஆட்சியர்

குருந்தன்கோட்டில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு சுவரோவியத்தை ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.;

Update: 2024-04-07 07:56 GMT

 சுவரோவியத்தை பார்வையிட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் வாக்களிப்பது குறித்த கல்லூரி மாணவ மாணவர்களால் வரையப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு  சுவரோவியத்தினை  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவர்   பி.என்.ஸ்ரீதர்  தேர்தல் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு முன்னிலையில்  நேரில் பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து கலெக்டர்  தெரிவிக்கையில்-     கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு சந்திப்பில் கல்லூரி மாணவ மாணவியர்களால் வாக்குரிமை பெற்ற  அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பாக வரையப்பட்ட  சுவரோவியத்தினை நேரில் பார்வையிட்டதோடு,     மூன்று சக்கர வாகனங்களில்  100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டதோடு, பொதுமக்களுக்கு  தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.  இவ்வாறு  தெரிவித்தார்.

Tags:    

Similar News