இடுபொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்த ஆட்சியர்
கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்களை ஆட்சியர் பார்வையிட்டார்.;
Update: 2024-06-13 15:15 GMT
ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்டம், கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்களின் இருப்பு குறித்து அலுவலர்களிடம் ஆட்சியர் விரிவாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.