திருநங்கைகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
வாழ்வாதார மேம்பாட்டிற்காக சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 04:02 GMT
திருநங்கைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
சமூகநலத்துறையின் சார்பில் கோரோட் அறக்கட்டளை மூலம் திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அவனுள் அவள் என்ற திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெற்ற 19 திருநங்கைகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அரசின் சார்பில் கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்