குன்னம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
குன்னம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 14:21 GMT
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரையாக பயன்படுத்தி வந்த சுடுகாடு பகுதியை தற்போது அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஒருத்தர் தனக்கு சொந்தமான நிலம் என்று வேலி அமைத்து,
ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் தங்கள் பரம்பரையாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டை தங்களுக்கே வழங்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகததை முற்றுகையிட்டு மனு அளித்திருப்பதாகவும், இதற்கு நடவடிக்கை இல்லை என்றால் தங்கள் ஊரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.