பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு திட்ட முகாம்

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-19 11:58 GMT

ஆட்சியர் ஆலோசனை

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், இரண்டாம் கட்டமாக பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி, கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்ட அரசு இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. எதைத் தோ்வு செய்து படித்தால் வேலைவாய்ப்பு பெறலாம் என்பதை மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். கல்லூரிக் கனவு திட்டத்தில் கல்லூரி, ஐ.டி.ஐ. யில் உள்ள பாடப் பிரிவுகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த ஏப். 22 ஆம்தேதி நடைபெற்ற முதல்கட்ட கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்துகொணடனா். இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பெற்றோா் கலந்துகொண்டனா். மாணவா்களாகிய நீங்கள் நல்ல கல்வி கற்று உங்கள் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் பொறுப்புள்ளவா்களாக தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரமேஷ் குமாா், இந்தியன் வங்கி மேலாளா் சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வெங்கடேசன், எம்எம்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி.எஸ்.குமரேசன், உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சியாளா் இளையராஜா, வணிகவியல் துறை பேராசிரியா் நாகமணி, ஊக்குவிப்பு பேச்சாளா் சாக்கன், அபிநயா, மாணவ மாணவியா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News