கல்லூரி மாணவி விபத்து - சிசிடிவி வீடியோ காட்சி

எடப்பாடி கள்ளுக்கடை அருகே இருசக்கர வாகனத்தின் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-05-19 04:29 GMT

சிசிடிவி காட்சி 

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி கிராமத்திலுள்ள தோப்புக்காட்டில் வசிக்கும் ரவி விஜயா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் மூன்றாவது மகளான மதுமிதா (20) குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் JKKN கல்லூரியில் B.Tech மூன்றாம் ஆண்டு பயின்று வரும் நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் வெள்ளரிவெள்ளியிலுள்ள தனது வீட்டிலிருந்து மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காக சூப்பர் எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் சித்தூர் நோக்கி கள்ளுக்கடை நான்கு ரோடு சந்திப்பில் சென்ற போது எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி நோக்கி அதி வேகமாக வந்த பொலிரோ பிக் அப் ஜீப் மோதி விபத்துக்குள்ளாகியது. 

ஜீப் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி மதுமிதா எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கின்றார். இதனிடையே விபத்துக்குள்ளாகி கல்லூரி மாணவி மதுமிதா தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News