வேளாண் கல்லூரி மாணவர்கள் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் பயிற்சி
பேராவூரணி ஒன்றியத்தில் புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் தேங்காய் மதிப்புக்கூட்டல் குறித்து பயிற்சி பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் உள்ள பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்த புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் துரைசெல்வத்திடம் கலந்துரையாடி பயிற்சி பெற்றனர். அங்கு 1,100 தென்னை விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களிடம் கொப்பரை தேங்காய் தேர்வு, எண்ணெய் பிரித்து எடுத்தல் மற்றும் மதிப்பு கூட்டல் போன்றவற்றை அறிந்து கொண்டனர்.
மேலும், மாணவர்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் இயக்குனர் துரைசெல்வம் வழங்கினார். மாணவர்கள் முத்து ஈஸ்வரன், ஹர்சத், கௌஷிக், கலை தேவா, கலையரசன், கார்த்திக், கார்த்திகேயன், கிருபாகரன், மதன், மனோஜ், மனோஜ் குமார், முகிலன் ஆகியோர் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.