கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சி!
விவசாயத்தில் நவீன கருவிகளின் பயன்பாடு குறித்து தூத்துக்குடி புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை நேரடியாக கிராமங்களுக்கு அழைத்து சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. கிராமப்புற மேம்பாட்டுக்கான அம்சங்கள், விவசாயத்தில் நவீன கருவிகளின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக தூத்துக்குடி தாலுகா தளவாய்புரம் கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று ட்ரோன் கருவி மூலமாக விவசாய பயிர்களுக்கு விதைப்பது, பயிர்களை காப்பாற்ற பூச்சி மருந்து தெளிப்பது போன்ற செய்முறைகளை விவசாயிகளுக்கு செய்து காட்டினர். இந்த ட்ரோன் கருவி மூலம் பயிர்களின் வளர்ச்சியை கண்காணிப்பது குறித்தும் செய்து காட்டினார். இதனை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் வளாக மேலாளர் விக்னேஷ், மின் மற்றும் மின்னனுவியல் துறை தலைவர் எபனேசர் ஆகியோர் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.