தாம்பரம் அருகே ஆயிரம் தோசை சுட்டு உலக சாதனை படைத்த கல்லூரி மாணவர்கள்
தாம்பரம் அருகே ஆயிரம் தோசை சுட்டு கல்லூரி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-28 14:59 GMT
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் அருகே தனியார் கல்லூரியில் 100 நபர்கள் இணைந்து எட்டுவகை சிறு தானியங்களை பயன்படுத்தி ஆயிரம் விதமான தோசைகளை ஒரு மணி நேரத்தில் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக ராகி, திணை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய வகையை சேர்ந்த தோசைகள் மற்றும் பிஸ்கட் பழ தோசைகள் மேகி தோசைக்கு போன்ற ஆயிரம் வகையான தோசைகளை ஒரு மணி நேரத்தில் செய்து உலக சாதனை படைத்தனர்.
இந்த சாதனையை அங்கீகரித்து கலாம் புக்கா ரெகார்ட்ஸ் சார்பில் உலக சாதனை சான்றிதழ் வழங்கினர். இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சிதம்பரராஜன், துணை முதல்வர் முருகன் மற்றும் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.