தபால் வாக்கு செலுத்தும் பணி துவக்கம்

விழுப்புரத்தில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பூர்த்தி செய்யப்பட்ட தபால் வாக்குகளை பெறும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-05 07:17 GMT

தபால் வாக்கு செலுத்தும் முதியவர்

விழுப்புரம் மாவட்டம் 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதிக்குட்பட்ட TSR நகரில் விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்களான வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பழனி துவக்கி வைத்தார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் பொதுத்தேர்தல் - 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்குகளை வீட்டிலிருந்தவாறே அஞ்சல் வாக்குச்சீட்டின் மூலம் செலுத்திடும் பொருட்டு சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க நடமாடும் அஞ்சல் வாக்குசீட்டுக் குழு (Mobile Postal Ballot Team) அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் சட்டமன்ற தொகுதிக்கு 01 நுண்பார்வையாளர், 01 மண்டல அலுவலர் மற்றும் 01 காவல்துறையினர் கொண்டு குழு மூலமாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு செலுத்தும் பெட்டியின் மூலம், 85 வயதிற்குமேற்பட்ட மூத்த குடிமக்களான வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News