தபால் வாக்குகளை பெறும் பணி துவக்கம்
ஈரோடு மக்களவை தொகுதியில முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் பெறும் பணி துவங்கியுள்ளது.
Update: 2024-04-05 05:08 GMT
ஈரோடு பாராளுமன்றத்திற்குட்பட்ட ஈரோடுகிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய ஆறு தொகுதிகள் அடங்கும் இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 21805 மாற்று திறனாளிகள் 9824 இவர்கள் அனைவருக்கும் தபால் வாக்கு போடும் படி கடந்த மூன்று நாட்களாக படிவம் 12 D வழங்கும் பணி நடைபெற்றது. இதில் 2201 முதியவர்களும் 800 மாற்று திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த சம்மதம் தெரிவித்து உள்ளனர் மற்றவர்கள் தாங்களாகவே நேரில் சென்று வாக்கு அளிக்கிறோம் என தெரிவித்து உள்ளனர் விருப்பம் தெரிவித்த 3001 பேரின் தபால் வாக்குகளை நேரில் பெறும் பணியை இன்று அந்தந்த தொகுதி மண்டல அலுவலர்கள் காலை 7 மணி முதல் துவங்கி 3 குழுக்களாக பிரிந்து மாலை 6 மணி வரை பெற உள்ளனர்.7 ம் தேதி வரை இந்த வாக்குகள் பெறப்படும்.