சோமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு தொடக்கம்

Update: 2023-12-18 02:24 GMT

சோமேஸ்வரர், சௌந்தரநாயகி அம்மன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு தொடங்கியது. மார்கழி மாத தொடக்கத்தினையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டன. அதனையடுத்து அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் மற்றும் முருகன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டனர்.



Tags:    

Similar News