திண்டுக்கல்லில் பதக்கம் வென்ற மாணவருக்கு உற்சாக வரவேற்பு
திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த தேசிய போட்டியில் பரிசு பெற்ற மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-13 09:27 GMT
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
பீகார் பாட்னாவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான SGFI தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் SMBM மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆர்ட்ஸ் டிரஸ்ட் மாணவன் ஜிதின் அர்ஜுன் நீளம் தாண்டுதல் முதலிடம் 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம், 110 மீட்டர் தடை ஓட்டம் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இன்று திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த மாணவனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி பாராட்டு விழா நடத்தினர்.
இதில் மனிதநேய அமைப்பு தலைவர், மாவட்ட ஹாக்கிசங்க நிறுவனர் ஞானகுரு பேசியதாவது:மனித வாழ்க்கையில் மனதையும், உடலையும் ஒருங்கிணைத்து வளப்படுத்தக்கூடிய ஒரு அம்சம் இருக்கிறது என்றால் - அது உடற்பயிற்சி. மேலும் விளையாட்டு மட்டும் தான் என்பதை மனித சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.