கட்டட பொறியாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
Update: 2024-06-24 13:15 GMT
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் மாவட்ட பதிவாளர் உத்தரவின்படி பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட பதிவாளர் உத்தரவின் படி சங்கங்களை முறைப்படுத்துவது, சங்க தேர்தல்களை எவ்வாறு நடத்த வேண்டும், நிர்வாகிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும், நிர்வாகிகளின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்ன, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்கப்பட்டது அததைத் தொடர்ந்து பதிவாளரின் உத்தரவுப்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், கூட்டமைப்பின் கீழ் செயல்படும் சங்கங்களின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.