உலா வந்த இரண்டு காட்டு யானைகளால் பரபரப்பு
கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் நண்டாங்கரை அருகே மலைச்சாலையில் உலா வந்த இரண்டு காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-05-11 02:08 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியேறி விவசாய நிலங்களில் முகாமிடுவதும், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது, இந்நிலையில் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் நண்டாங்கரை அருகே இரண்டு காட்டு யானைகள் திடீர் என உலா வந்தது, இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டுனர்கள் அச்சம் அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மலைச்சாலையில் உலா வந்த இரண்டு காட்டு யானைகளை அசாம்பாவிதம் ஏற்படாத வகையில் தாண்டிக்குடி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி சென்றனர், இதனால் மலைச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.