போட்டி போடும் பேருந்துகள் - விபத்து அபாயம்

உசிலம்பட்டியில் போட்டி போட்டு சென்று விபத்தை ஏற்படுத்தும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-06-13 07:51 GMT

வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு

மதுரையில் இருந்து தேனி,கம்பம் செல்லும் தனியார் பேருந்துகள் மிக வேகமாகவும் அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு செல்வதால் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் வாரம் இருமுறை விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது,ஆகவே தனியார் பேருந்துகளில் வேகத்தை குறைத்து போட்டி இல்லாமல் செல்ல வலியுறுத்தியும் அவற்றை மீறி வேகமாக செல்லும் தனியார் பேருந்துகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேரில் சென்று புகார் மனு அளிக்கப்பட்டது.. தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்,தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட அனைவருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News