போடியில் மனைவிக்கு கொலை மிரட்டல் காவல்துறையினர் வழக்கு
போடியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;
Update: 2024-06-27 16:22 GMT
வழக்குப்பதிவு
தேனி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி வேல்மணி ஆகியோருக்கு 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு போடி உரிமை இயல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த மகேஸ்வரியை வேல்மணி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போடி காவல்துறையினர் வேல்மணி மற்றும் அவரது தாயார் மீது வழக்கு பதிவு செய்தனர்