ஆன்லைனில் பணம் இழந்தவர் புகார்
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆன்லைன் லிங்க் மூலம் 8,29, 900ரூ இழந்தவர் பணத்தை மீட்டு தரகோரி புகார் அளித்துள்ளார்.;
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா கரிசல்குளம் பகுதியைச் சார்ந்தவர் ராமகிருஷ்ணன். வயது 57 இவர் சிவில் இன்ஜினியர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய தொலைபேசிக்கு லிங்க் வந்ததாகவும் அதை அவர் கிளிக் செய்து தனது வங்கியில் முழு விவரங்களையும் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து 84 53 73 62 75 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்ததாகவும் தொடர்பு கொண்டு பேசிய நபர் குறிப்பிட்ட சில எண்ணெய் டயல் செய்ய சொன்னதாகவும் அதை அவர் டயல் செய்த பிறகு அவர் வங்கியில் இருந்து இரண்டு தவணைகளாக மொத்தம் 8 லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாகவும் தான் ஏமாற்றப்பட்டது, அறிந்த அவர் இறந்த பணத்தை மீட்டுத் தரக் கூறி இணைய வழி இணையவளையில் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.